Friday, October 12, 2012

இரத்த சுத்திகரிக்க நறுவல்லி CORDIA DOCHOTOMA

இரத்த சுத்திகரிக்க நறுவல்லி CORDIA DOCHOTOMA

பொதுவான குணம் நறுவல்லி ஒரு பூ பூக்கும் ஒரு நடுத்தர மர வகையைச் சேர்ந்தது. இந்த மரத்தை நறுவிலி என்றும் அழைப்பர். அடிமரம் உயரம் அற்றதாக வளைந்து திருகுடையதாக கரணைகள் கொண்டிருக்கும். இது இந்தியா, இண்டோமலாயா, வட ஆஸ்திலேலியாமேற்கு மலநேசியா, சைனா, ஜப்பான், தாய்வான், பாக்கீஸ்தான், இலங்கை, கம்போடியா, லாஸ், பர்மா, தாய்லேண்ட், வியட்னாம், இந்தோனேசியா, மலேயா, நியுஜினியா, ஆஸ்திரேலியாஆகிய நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், மேற்குத் தொடர்ச்சி மலை, மாய்மர் காடுகள் ஆகிய இடங்களில் காணப்படும். ஆங்கிலத்தில் பொதுவான பெயர்கள்- Glue berry, Pink pearl, Bird lime tree, Indian cherry, ஆகியவை. இது வளமான மண்ணில் நன்கு வளரும். சரள் மண்ணில் வளராது. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். இது சுமார் 40 அடி முதல் 90 அடி உயரம் வரை வளரும். இந்த மரம் மென்னையாக இருக்கும். பட்டையை நீக்கி விட்டு இதில் ஈருகோலி மற்றும் பேன் சீப்புச் செய்வார்கள். மரத்தின் விட்டம்  25-50 செ.மீ. இருக்கும். மரம் சிறிது திருகிச் செல்லும். 1500 அடி கடல் மட்டத்திற்கு மேல் வளராது. மழையளவு 250-300 எம்.எம் வரை தேவைப்படும். ஓடை ஓரங்களில் நன்கு வளரும். இதன் இலைகள் ஓவல் வடிவத்தில் இருக்கும், முக்கோண வடிவிலான தனித்த மாற்றடுக்கில் அமைந்த இலைகள் காம்படி அகன்றும் முனை சிறுத்தும் காணப்படும். இலைகளை லார்வா சாப்பிடும். மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்துவர். பர்மாவில் இலைக்காக வளர்ப்பார்கள். கொனைகளின் இறுதியில் வெள்ளை நிறமுடைய சிறிய மலர்கள் கொத்தாகப் பூத்திருக்கம். 2 செ.மீ. குறுக்களவுள்ள முட்டை வடிவிலான சதைப்பற்றுள்ள காய்கள் கொத்தாகக் காய்த்துப் பழமாகும் போது கருப்பு நிறமுடையனவாக மாறும்.  இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இதன் அகலம் 2-3 செ.மீ. நீளம் சுமார் 10 செ.மீ. இருக்கும். பூக்கள் சிறிதாகவும், வெண்மை நிறத்திலும் கொத்துக் கொத்தாக இருக்கும். பூ 8 எம்.எம். நீளத்தில் இருக்கும். பூக்கள் தன் மகரந்தச் சேர்க்கையால் காய் உண்டாகும். இதன் பிஞ்சை ஊறுகாய் போடப் பயன்படுத்துவார்கள். இதன் பழங்கள் 10-13 எம். எம். நீளம் இருக்கும். பழங்கள் கத்தரிப்பூ நிறத்திலும், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் பழம் சாப்பிட வழுவழுப்பாக இருக்கும். விதை 6 எம்.எம். நீளம் கொண்டவை. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பறவைகளால் விதைகள் பரவும்..
வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர் CORDIA DOCHOTOMA. .தாவரக்குடும்பம் :  BORAGINACEAE
மருத்துவக் குணங்கள்
நறுவல்லியின் தன்மை சூடும், குழுமையும் ஆகும். இதன் முக்கிய பயன் சுத்த இரத்தம் உண்டாக்கும். வண்டல் சம்பந்தமான நோய்களைக் கண்டிக்கும். கபத்தை அறுக்கும். தாகம், பித்தம் நீர்சுருக்கு, சூடு சம்பந்தமான இருமல் இவைகளை நீக்கும். குடலுக்குப் பலம் கொடுக்கும். குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு இவைகளை நீக்கும். மருந்து களினால் உணைடாகும் வேகத்தைத் தணிக்கும். பேரீச்சம் பழத்துடன் அரைத்துப் பூச பருக்களை உடைக்கும். நறுவல்லியின் செய்கைகள் யாதெனில், கார்ப்பு, துவர்ப்பு, இனிப்புச்சுவைகள், குழுமை, செரிமானத்தை வளர்த்தல் போன்றவையாகும். நறுவல்லியின் பட்டையின் பொடியும், கொட்டையின் பொடியும் கிருமி நோய், கொப்பளம், பித்தம், அக்கி, நஞ்சு, குடல் புண்கள், மார்பக மற்றும் நிறுநீர் குழாய் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.  இதன் பட்டை குடற்புழுக்களைக் கொன்று வெளியேற்றுவதோடு மலத்தைக் கட்டவும் செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் இது இரத்திலான அசுத்தத்தை நீக்குகின்றது. அஜீரணத்தைப் போக்குவதோடு காச்சலையும் தணிக்கின்றது. சீதபேதி, உடல் எரிச்சல், தொழுநோய், சொறிசிரங்கு ஆகியவற்றையும் குணமாக்கும். இதன் இலை காம உணர்வை மேலோங்கச் செய்யும் இயல்புடையது. வெட்டை நோய், கண்ணிலான வலி ஆகியவற்றைக் குணமாக்கும்.  இதன் பழம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு பேதி மருந்தாகப் பயன்பட்டுக் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறவும் உதவுகின்றது.  காம உணர்வைத் தூண்டுவதோடு, சிறுநீர் எளிதில் பிரியவும் உதவும். தொழுநோய், தோல்வியாதிகள், உடல் எரிச்சல், மூச்சிறைப்பு, மூட்டுவலி, வறட்டு இருமல்சிறுநீரகக் கோளாறுகள், தொண்டை வறட்ச்சி, மண்ணீரல் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் இப்பழம் பயன்படுகிறது. 
நறுவிலியி லைக்கு இரைப்பு நாசம் வேர்க்கு
மறுவில் எலும்புருக்கி மாறும் நறுவிலியின்
தன்பழம் இரத்தபிஞ் சார்மேக முந்தீர்க்கும்
நறுவலி'

2 comments:


  1. வாந்திக்கு வசம்பு ACORUS CALAMUS
    வாதநோய் போக்கும் வாதநாராயணன் DELONIX ELATA
    வீக்கம் கரையும் விராலி HYMENODICTYON EXCLSUM
    நெஞ்சு கோழையை அகற்றும் வேலிப்பருத்தி DAEMIA EXTENS...
    சீதம் நீக்கும் வெற்றிலை PIPER BETEL
    தெய்வீக மூலிகை மரம் வில்வம் AEGLE MARMELOS
    மூளை வளர்ச்சிக்கு வல்லாரை CENTELLA ASIATICA
    சுகப்பிரசவம் ஆக முடக்கற்றான் CARDIOSPERMUM HALICAC...
    பேய் விரட்டும் மருதாணி LAWSONIA INERMIS
    மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும் பிரண்டை VITIS QUADRA...
    காயகற்ப மூலிகை நெல்லி EMBILICA OFFICINALLIS
    நீரடைப்பை நீக்கும் நெருஞ்சில் TRIBULUS TERRESTRIS
    எட்டு வகை மூலமும் போக குப்பைமேனி ACALYPHA INDICA
    காக்காய் வலிப்புக்கு அக்கரகாரம் ANACYCLUS PYRETHRU...
    மூட்டு வலிக்குஅத்தி FICUS GLOMERATA
    எரிபுண், மலபந்தம் அம்மான்பச்சரசி EUPHORBIA HIRTA
    காமம் பெருக்கி அறுகம்புல் CYNODON DACTYLON
    பாலுணர்வை அதிகரிக்க நரம்புத் தளர்ச்சிக்கு அஸ்வகந்த...
    சீதபேதி, ரத்தபேதி குணமடைய ஆடாதொடை Adatoda Vasica N...
    தாகம் தணிக்கும் ஆரை MARSILEA QUADRIFOLIA
    காமம் பெருக்கி ஆவாரை CACSIA AURICULTA
    பைத்தியம் குணமாக ஊமத்தை DATURA METEL
    பித்தம்போக எட்டி மரம் STRYCHNOS NUX VOMICA
    விஷக்கடிகளை குணமாக்கும் எருக்கன் CALOTROPIS GIGANT...
    மலமிளக்கி,சிறுநீர் பெருக்கி எள்ளுச்செடி SESAMUM IN...
    பித்தம் போக்கும்,சித்தம் ஆக்கும் எலுமிச்சை CITRUS ...
    இருமல் தணிக்க கஞ்சாங்கோரை OCIMUM CANUM
    இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய கண்டங்கத்திரி SOLANU...
    மஞ்சள் காமலைக்கு கரிசலாங்கண்ணி - ECLIPTA PROSTRATA...
    மாதவிலக்குத் தூண்ட கல்யாண முருங்கை - ERYTHRINA IND...
    இரத்தக்கசிவை நிறுத்த காட்டாமணக்கு - JATROPHA CURCA...
    இரத்தப் பேதி நிற்க கானா வாழை - COMMELINA BENGALENS...
    மஞ்சக்காமாலைக்கு கீழாநெல்லி - PHYLLANTHUS AMARUS
    உடல் பருமனைக் குறைக்க கோரை - CYPERUS ROTUNDUS
    தாய்ப்பால் பெருக சீந்தில் கொடி - TINOSPORA CARDIFO...
    கூந்தல் வளர்ச்சிக்கு செம்பருத்தி - HIBISCUS ROSASI...
    வயிற்றுப் போக்கு தீர ஜாதிக்காய் - Myristica Fragra...
    தெய்வீக மூலிகை, கல்ப மூலிகை -துளசி - Ocimum
    அசுத்தம் நீக்கி தேகம் வலிவுள்ளதாக்க தூதுவேளை - Sol...
    மனோசக்தி அதிகமாக தொட்டால் சிணுங்கி - MIMOSA PUDICA...
    சிறுநீர்ச்சர்க்கரையைக் குறைக்க நித்தியகல்யாணி - CA...
    தோல் நோய்களைக் குணமாக்க நுணா - MORINDA TINCTORIA
    ஞாபகச் சக்தியை கூட்ட அரிவாள்மனைப் பூண்டு - SIDA CA...
    சர்க்கரை நோய்க்கு இன்சுலின் செடி - Costus
    கிரந்தி நோய் போக இரணகள்ளி - EUPHORBIA
    கருப்பை குரைபாடுகள் போக இலந்தை - ZIZYPHUS JUJUBA
    கிருமி நாசினி எலுமிச்சைப் புல் - CYMBOPOGAN FLEXOS...
    சொறி, சிரங்குகுணமாக எழுத்தாணிப் பூண்டு - PRENANTHE...
    மூலம் குணமாக கருவேல் BABUL
    சர்க்கரை வியாதிக்கு கள்ளிமுளையான் CARALLUMA FIMBRI...
    வயிற்றுபூச்சிக்கு சுண்டை SOLANUM TARVUM
    சொட்டு மூத்திரம் நிற்க செண்பகம் MICHELIA CHAMPACA
    முகப்பரு மறைய திருநீற்றுப்பச்சை OCIMUM BASILICUM
    வயிற்றுப் போக்குக்கு நந்தியாவட்டை ERVATAMIA CORONR...
    சிறுநீரக நோய்க்கு நன்னாரி HEMIDESMUS INDICUS
    இரத்த சுத்திகரிக்க நறுவல்லி CORDIA DOCHOTOMA

    ReplyDelete
  2. நீர்க்கோவை நீக்க நல்ல வேளை GYNANDROPSIS PENTAPHYLL...
    நரம்புகளை ஊக்கப்படுத்த நாவல் EUGENIA JAMBOLANA
    சிறு நீரைப் பெருக்கும் நீர் முள்ளி ASTERACANTHA L...
    மணமூட்டும் பச்செளலி POG0STEMON CABIN,
    குடிதண்ணீர் சுத்திகரிக்க பதிமுகம் -CAESALPINIA SAP...
    மலச்சிக்கலைப் போக்கும் பப்பாளி-CARICA PAPAYA
    இரத்த அழுத்தம் குறைய பழம்பாசி -SIDA CARDIFOLIA
    வாத சுரம் போக்கும் பாவட்டை -PAVETTA INDICA
    தேள்கடிக்கு பிரமந்தண்டு-ARGEMONE MEXICANA
    வாய்வுக் கோளாறுக்கு பூண்டு-ALLIUM SATIVUM
    ஆண்மையைப் பெருக்க பூனைக்காலி -MUCUNA PRURIENS
    நோய்களை மிரட்டும் பேய்மிரட்டி-ANISOMELES MALABARIC...
    இரத்தவிருத்திக்கு மாதுளை -PUNICA GRANATUM
    காமம் பெருக்கும் முருங்கை-MORINGA OLEIFERA
    அம்மை நோய் தணிய வேம்பு AZADIRACHTA INDICA
    தாய்ப்பால் பெருக வெந்தயம் – கீரை TRIGONELLA FOENUM...
    மனம் மகிழ்ச்சிக்கு வெட்டிவேர் CHRYSOPOGON ZIZANIOI...
    புண் ஆற்ற லாவண்டர் LAVENDULA OFFICINALIS
    உடலுக்குப் புத்துணச்சிக்கு ரோஸ்மேரி ROSEMARINUS OF...
    இதயத்தை வலுவூட்ட ரோஜா ROSA DAMESCENA
    வெட்டுக்காயங்கள் குணமாக முறிகூடி HEMIGRAPHIS COLOR...
    மூலச்சூடு போக மூக்கிரட்டை BOERHAAVIA DIFFUSA
    சிறுநீர் பெருக்கும் முள்ளங்கி RAPHANUS
    மலச்சிக்கலுக்கு கொன்றை CASSIA FISTULA

    ReplyDelete