வயிற்றுப் போக்குக்கு நந்தியாவட்டை ERVATAMIA CORONRIA
பொதுவான குணம் நந்தியாவட்டை ஒரு
செடியினம். இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும். இதன்
பூக்கள் வெந்நிறமாக இருக்கும். மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும்
காணப்படுகின்றன. பூசைக்கு உரிய மலர்களானதால் திருக்கோயில் நந்தவனங்களிலும்
வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும்
வளர்க்கூடியது. இதன் பிறப்பிடம் வட இந்தியா. இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகுப்
பூஞ்செடியாக வளர்க்கிறார்கள். இது 3 - 5 அடி உயரங்கூட வளரும். இது முக்கியமாக கண் நோயிக்கான மருந்தாகப் பயன்
படும். இனப் பெருக்கம் விதைகள் மூலமும் கட்டிங் மூலமும் செய்யப்படுகின்றது.
வேறுபெயர்கள் Pinwheel
flower, Moon beam, East Indian roseby, & crepe jasmine.
ஆங்கிலப் பெயர் ERVATAMIA CORONRIA. தாவரக்குடும்பம்
:
APOCYANACEAE.
மருத்துவக் குணங்கள்
மருத்துவக் குணங்கள்
நந்தியாவட்ட வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு
நீங்கும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன் படுகின்றது.இதை நிறதிற்கும்
பயன் படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள்.
நந்தியாவட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயை மூழ்க ஊற்றி 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டி வரப் பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.
‘காசம் படலங் கரும்பாவைத் தோஷமெனப்
பேசுவிழி நோய்கடமைப் பேர்ப்பதன்றி-யோசைதரு
தந்திபோ லேதெறிந்துச் சாறு மண்டை நோயகற்று
நந்தியா வட்டப் பூ நன்று.’
நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும்.
இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும் இதன் வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும். இதன் பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ எடுபடும். சண்பகப்பூ 60, கார் எள்ளுப்பூ 100, நந்தியாவட்டப் பூ 100 இவற்றைச் சுத்தமாக தூசி மண் முதலியவை இல்லாமல் இதழ்களைச் சுத்தமான கல்வத்தில் போட்டு அதனுடன் துளசி வேர், சங்குப் பொடி, மண்டைஓட்டுப் பொடி வகைக்குக் கழஞ்சி 1, மயில் துத்தமை கழஞ்சி 2, கூட்டிப் புளியம் பூச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாற்றிலுமாக அடைத்துப் பல்பக் குச்சை போல் திரட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு தாய்பாலில் உரைத்துக் கண்களுக்குத் தீட்டி வரக் கண்வலி, பூவீழ்தல், சதைவாங்கி முதலியன போகும்.
நந்தியாவட்டப்பூ காம்பு நீக்கியது பலம் 2, சிறு களாப்பூ பலம் 2, இவை இரண்டையும் ஒரு சுத்தமான வெள்ளைப் புட்டியில் போட்டு இந்தப் பூக்கள் மூழ்க நன்றாகக் கழுவிச் சுத்தி செய்த எள்ளைச் செக்கிலாட்டியெடுத்து நல்லெண்ணை 3 சேர் விட்டுப் புதிய சடை கார்க்கால் அழுத்தமாக அடைத்து உள்ளே சலம் செல்லாமல் மெழுகினால் சீலை செய்து மண் தரையான பசுவின் தொழுவத்தில் ஓரடி ஆழத்தில் 40 நாள் புதைத்து வைத்து எடுத்து ரவி முகத்தில் 21 நாள்கள் வைத்த பின்னர் வடிகட்டி வைத்துக் கொள்க. இந்த தைலத்தைக் கண்களுக்கு 1 - 2 துளி வீதம் தினம் இரண்டு வேளை காலை, மாலை, விட்டுக் கொண்டு வர கண்களில் உண்டாகும் பூ, சதை வளர்ச்சி, பலவித கண்படலம் ரோகங்களுக்கு இன்றியமையாததாகும்.

No comments:
Post a Comment