Wednesday, October 10, 2012

இரத்தப் பேதி நிற்க கானா வாழை - COMMELINA BENGALENSIS



இரத்தப் பேதி நிற்க கானா வாழை - COMMELINA BENGALENSIS

பொதுவான குணம் கானா வாழையின் பிறப்பிடம் ஆசியா, ஆப்பிரிக்கா. பின் சைனா, தாய்வான், ஜமாய்க்கா, அமரிக்கா, கலிபோர்னியா, பாக்கீஸ்தான், நேபால் இந்தியா போன்ற நாடுகளில் பரவிற்று. தமிழ்நாட்டில் ஈரமான இடங்கள் கடற்கரை அடுத்த நிலங்களில் தானாக வளரும் சிறு செடி. இது பயிர்களில் கழையாக வளரக்கூடியது. இதன் இலைகள் முட்டையாக ஈட்டி வடிவில் அமைந்திருக்கும். இலைகள் மென்மையாக பச்சையாக தண்ணீர் உள்ள சதைப்பற்றை உடையது. இது தரையோடு படர்ந்து மேல் நோக்கி வழரும் சிறு செடி. இதன் மலர்கள் நீல நிறமாக சிறிதாகக் காணப்படும். கீரையாகப் பருப்பு கலந்து கூட்டுக் கறியாகச் சமைத்துண்ணலாம். விதைமூலம் இனவிருத்தியாகிறது.
வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர் COMMELINA BENGALENSIS. தாவரக் குடும்பம் :- COMMELINECEAE.
மருத்துவக் குணங்கள்
கானா வாழையை சீனா மக்கள் மூலிகையாகப் பயன்படுத்தினர். பாக்கீஸ்தானில் தோல் வியாதியால் ஏற்படும் வீக்கம் குறைக்கப் பயன் படுத்தினர், தொழுநோய் புண்களை சுத்தப் படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தினர். நேபாலில் உணவுக்குக் கீரையாகப் பயன்படுத்தினர். கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தினர். தீப்புண் குணமாகவும் இதைப் பயன்படுத்தினர்.
சமூலத்தைக் குடிநீராக்கிக் குடிக்க எளிய சுரம் போகும்.
சமூலத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து குடிநீராக்கிக் கொடுக்கத் தாகம் மிகுதியாக உள்ள சுரத்தில் தாகமும் சுரமும் நீங்கும்.
சமூலத்துடன் அறுகம்புல் சமனாக மையாய் அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை, மாலை பாலில் கொடுக்க இரத்தப் பேதி நிற்கும்.
சமூலம், அசோகுப் பட்டை, அறுகு சமன் அரைத்துக் காலை மதியம், மாலை நெல்லிக்காயளவு கொடுத்து வர பெரும்பாடு தீரும்.
சமூலம், தூதுவேளைப் பூ, முருங்கைப் பூ ஒரு குவளை நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ளத் தாது பலப்படும்.
இலையுடன் சம அளவு கீழாநெல்லி மையாய் அரைத்துத் தயிரில் நெல்லிக் காயளவு காலை, மதியம், மாலை கொடுக்க வெள்ளைப் போக்கு தீரும்.
இலையை அரைத்துக் கட்டப் படுக்கைப் புண், மார்புக் காம்பைச் சுற்றி வரும் புண்கள் தீரும்.
இலையைக் கசக்கி முகப்பருவிற்கு வைக்க விரைவில் குணமடையும்.

No comments:

Post a Comment