Wednesday, October 10, 2012

மலமிளக்கி,சிறுநீர் பெருக்கி எள்ளுச்செடி SESAMUM INDICUM



மலமிளக்கி,சிறுநீர் பெருக்கி எள்ளுச்செடி SESAMUM INDICUM
பொதுவான குணம் எள்ளுச்செடி எல்லாவித மண்ணிலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு செடி. இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா. பின் உலகெங்கிலும் பரவிற்று. ஆதிகாலத்திலிருந்து எண்ணெய் வித்துக்களில் எள்ளின் விதைதான் முதலில் தோன்றியதாகச் சொல்வர். 5000 ஆண்டுகளுக்கு முந்தியது. சைனா மற்றும் இந்தியா உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் அதிகம் செய்தது. சைனா, தென்கிழக்கு ஆசியா, அமரிக்கா, கனடா, நெதர்லேண்டு, துரிக்கி, பர்மா, சூடான், மெக்சிகோ, நைஜீரியா, வெனிஸ்சுலா, உகந்தா, எத்தோப்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் எள் பயிரிட ஆரம்பித்தன.
எள்ளுச்செடி சுமார் 50 முதல் 100 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. ஆப்பிரக்காவில்  6 அடி உயரங்கூட வளரும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இது 4 – 14 செ.மீ. நீளம் இருக்கும். இது தும்ப இலையை ஒத்திருக்கும். ஆனால் கொஞ்சம் பெரிதாக இருக்கும். எள் செடி வெண்மையான பூக்களை விடும். ஆனால் ஆப்பிரிக்காவில் மஞ்சள், நீலம், ஊதா நிறங்களிலும் பூக்கள் விடும். இதன் பூக்கள் தன்மகரந்தச் சேர்க்கையாலும், மற்றும் தேனீக்கள், பறவைகளாலும் அயல் மகரந்தச் சேர்க்கையால் பூக்கள் காயாக வளரும். காய்கள் நீண்டிருக்கும். 2 – 8 செ.மீ.நீளம் இருக்கும்.  ஒரு விதையில் சுமார் 100 விதைகள் இருக்கும். ஒரு விதையின் எடை சுமார் 20 -40 மில்லிகிராம் எடை இருக்கும். கருப்பாக மென்மையாக இருக்கும், வெள்ளை நிறத்திலும் எள் இருக்கும். இதை வியாபார நோக்கில் பயிர் செய்பவர்கள் வளமான மண்ணை நன்கு உழுது, உரமிட்டு பாத்திகள் அமைத்து எள்ளை மணலுடன் கலந்து விதைப்பார்கள். அதன் பின் தண்ணீர் விட்டு சில நாட்களில் முழைக்க ஆரம்பிக்கும். பின் 10 நட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாச்சுவார்கள். பின் செடி ஒரு அடி வளர்வதற்குள் கழை எடுப்பார்கள். பின் செடி வளர்ந்து மூன்று அல்லது நான்கு மாதத்தில் காய்கள் முற்றி பழுக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அவைகள் அருவடை செய்து கல் மண் இல்லாத களத்தில் கொண்டு போய் காய்கள் மேல் நோக்கி இருக்கும் படி வைத்து வெய்யிலில் உலர வைப்பார்கள். காய்கள் நன்கு காய்ந்து மேல்முனையிலிருந்து வெடிக்க ஆரம்பிக்கும். அப்போது செடிகளை தலைகீளாக உலர்த்தி லேசாகத் தட்டினால் எள் கழத்தில் விள ஆரம்பிக்கும். அவ்வாறு விழுந்ததைச் சேகரித்து சுத்தம் செய்து மூட்டையாகக் கட்டுவார்கள். ஆனால் இது மானாவாரியாகவும் விளையும். தமிழ் நாட்டில் நெல் அருவடைக்குப் பின் எள்ளை விதைத்து எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். எள் விதையை ஆட்டி எண்ணைய் எடுப்பார்கள் அது தான் நல்லெண்ணெய் என்பது.
வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர் SESAMUM INDICUM தாவரக்குடும்பம் :- PEDALIACEAE
மருத்துவக் குணங்கள்
எள் செடியிலிருந்து உண்டாகும் விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய் நல்ல மருத்துவ குணமுடையது. அதன் செய்கை மலமிளக்கி, உள்ளழலாற்றி, சிறுநீர் பெருக்கி செயலாற்றும். இதன் மருத்துவ குணம் அதிகம் ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் மருந்துகள் செய்ய துணை மருந்தாகப் பயன்படுகிறது. இதில் மெகனீசியம்காப்பர், கால்சியம் மற்றும் வைட்டமின் B1, E, A போன்றவை உள்ளன. இது கப, பித்த, வாத, மூலநோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், அனிமியா, தோல் நோய்கள் குணப்படுத்த வல்லது.  அந்தக் காலத்தில் ஆண்கள் புதன் கிழமை மற்றும் சனிக்கிழை நாட்களில் இந்த எண்ணெய் தேய்த்து உலரவிட்டுப் பின் குளிப்பார்கள். பெண்கள் வெள்ளிக் கிழமை நாழில் இந்த எண்ணெயைத் தலை, உடம்புக்குத் தேய்த்துக் குளிப்பார்கள். சனி நீராடு என்ற பழமொழியும் உண்டு. இதன் நோக்கம் உடல் சூடு குறைக்க வேண்டியும், உடல் மென்பை பெற வேண்டியும் ஆகும். பாபிலோனியாவில் பெண்கள் இந்த எண்ணெயைத் தான் அழகு சாதனமாகவும் உடம்பை மசாஸ் செய்யவும் பயன்படுத்தியுள்ளார்கள். எள்ளில் இனிப்புச்சேர்த்து எள் உருண்டை செய்து ரோமானிய படைவீரர்கள் சக்திக்காகவும் பலத்திற்காகவும் சாப்பிட்டுள்ளார்கள். இந்த எண்ணெய்  இறைவனுக்கு விழக்கு ஏற்றப்பயன் படுத்தியுள்ளார்கள். இறந்தவர்களின் மத சடங்குகளில் எள்ளைப் பயன்படுத்தியுள்ளார்கள். ரொட்டிக்கு மேல் எள்ளை வைப்பார்கள். மேலும் மெழுகுபத்தி, சோப்பு, பெயிண்ட், செண்ட், பூச்சிக் கொல்லி மருந்து செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் சமையலுக்கு இதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
கண் எரிச்சல் நீங்க- கண்ணில் சதா எரிச்சல் இருந்து கொண்டே இருந்தால், தேவையான அளவு எள்ளுப்பூவைக் கொண்டு வந்து, அதை ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இளஞ்சூடாக இருக்கும் போதே, இரவு படுக்கும் முன், அதை இரு கண்களையும் மூடிக் கொண்டு சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்துக்கொண்டு கட்டிக் கொண்டு உரங்கி, காலையில் எழுந்த பின் கட்டை அவிழ்த்து பூக்களை எடுத்து விட்டுக் கண்களைக் கழுவிக் கொள்ளவேண்டும். இந்த விதமாக மூன்று நாட்களுக்குக் கட்டினால் போதும். கண் எரிச்சல் மாறிவிடும்.
கண் பார்வை தெளிவடைய- நாற்பது எள்ளுப்பூ, மிளகு ஒன்பது, அரிசித் திப்பிலி இருபது, சம்பங்கி மொக்கு இருபத்தயிந்து இவைகளை வெய்யிலில் போட்டுச் சருகு போல காயவைத்து, உரலில் போட்டு இடித்து, துணியில் சலித்து ஒரு சுத்தமான சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை மிளகளவு தூளைக் கண்களில் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். மருந்தை கண்களில் போட்டவுடன் எரியும், கண்ணீர் வடிய விட்டால் கண் எரிச்சல் தணிந்து விடும். தொடர்ந்து ஏழு நாட்கள் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
தலைமுடி பாதுகாப்பு - ஒரு கைப்பிடியளவு எள்ளுச் செடியின் இலையை எடுத்து அளவான நீரில் 10-20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின் இரக்கி ஆரவைத்து, இலைகளை எடுத்து விட்டு அந்த நீரை தலைக்கு இட்டுத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் உதிர்வதும், இளநரை ஏற்படுவதும் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment