எரிபுண், மலபந்தம் அம்மான்பச்சரசி
பொதுவான குணம் ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். சிறு செடி. எதிர்
அடுக்கில் கூர்நுனிப்பற்களுடன் கூடியஈட்டி வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.விவசாய நிலங்களில் கழையாக
வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.
வேறுபெயர்கள் சித்திரப்பாலாடை.
ஆங்கிலப்
பெயர் EUPHORBIA HIRTA தாவரக்குடும்பம் : EUPHORBIACEAE
மருத்துவக் குணங்கள்
மருத்துவக் குணங்கள்
அம்மான்
பச்சரிசிக்கு எரிபுண், மல
பந்தம், பிரமேகக்கசிவு,
சரீரத்துடிப்பு, நமச்சல் ஆகியவை போகும்.
இந்த மூலிகையை
சுமார் நெல்லிக்காய் பிரமாணம் நன்றாய் அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேழை
மூன்றுநாட்கள் கொடுக்க அரத்த பிர்ழியம், மலபந்தம், நீர்கடுப்பு,தேகநமச்சல்,
ஆகியவை நீங்கும். இதன் பாலை நக
சுற்றிக்குஅடிக்க குணமாகும்.
சிவப்பு அம்மான்
பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம், ஆகியவை போகும். சுக்கில தாது
விர்த்தியாகும். இதைவெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.
இதை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 - 7 குன்றி எடை வீதம் மோரில் கொடுக்க குழந்தைகளுக்கு மலத்தை போக்கும், வயிற்று உபத்திரவத்தையும், கிருமிக் கூட்டத்தையும் ஒழிக்கும். இந்த இலையை அரைத்து சுமார் 1- 1.5 கழற்சிக்காய்ப் பிரமாணம் பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுக்க வேட்டை, வெள்ளை, மருந்துகளின் உஷ்ணம் ஆகியவைபோகும். அரைத்து ஊறலுடன் பரவுகின்ற படைகளுக்குப்பூச குணமாகும்.

இது
வயிற்றுப்பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும்,வெப்புத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம்குறைப்பானாகவும்,
செயற்படும்.
இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு, ஆகியவற்றில் வெடிப்பு ரணம் தீரும்.
இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு, ஆகியவற்றில் வெடிப்பு ரணம் தீரும்.
தூதுவேளை இலையுடன்
துவையல் செய்து சாப்பிடத்தாது உடல் பலப்படும்.
கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இரு வேழையும் எருமைத் தயிரில் உண்ணஉடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்புதீரும்.
கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இரு வேழையும் எருமைத் தயிரில் உண்ணஉடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்புதீரும்.
பூவுடன் 30
கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு
பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய் பால்பெருகும்.
பாலைத் தடவி வர
முகப்பரு, பால்பரு மறையும்.
கால் ஆணி வலி குறையும். இலையை நெல்லிக்காய் அளவு நன்கு அரைத்துபசும் பாலில் கலக்கிக்
காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்கச் சிறு நீருடன் குருதிப்போக்கு,
மலக்கட்டு, நீர்கடுப்பு, உடம்பு நமச்சல் ஆகியவை தீரும்.
No comments:
Post a Comment