Saturday, May 25, 2013

Lord Dhanvantari மூலிகை கடவுள்




Lord Dhanvantari is the incarnation of Lord Mahavishnu.
I bow and humbly request Lord Dhanwantari, who is the embodiment of perfect health -- respected by great seers and  people -- to remove old age, disease, fear and death through His divine presence in all natural herbal medicines.

Salutations to Him, Danvantari, who is holding with his four arms: a conch, a wheel or disk of energy (Sudarsana chakra), a leech and a nectar pot of amrita kalasha (celestial ambrosia) and a herb. In whose heart shines a very subtle, clear, gentle and pleasing blaze of light. This light also shines all around his head and lotus eyes. Who by his mere play destroys all diseases like a mighty forest fire.

தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார்.   அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ''நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் " எனக் கூறியப் பின் மறைந்து போனார்.  
வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். ஒருமுறை தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக் கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது. 
வாசுகி விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சி அடைந்தவர்களை எழச் செய்தார். அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைக்க அப்போதும் தன்வந்தரி தமது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார். ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது. மானச தேவி அவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றனர். அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக் கொள்ள தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபரானார். விஷ்ணு தந்த வரமும் பலித்தது.  தன்வந்தரி தனது கையில் அமிருதக் கலசத்தை வைத்துக் கொண்டு உள்ளவாறு காட்சி தருகின்றார். ஸ்ரீரங்கத்து ரங்கஸ்வாமி ஆலயத்தில் அவருக்கு தனி சன்னதி உள்ளது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்தரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபாட்டு வருகின்றனர் எனக் கூறுகிறார்கள்.
அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, 
மருத்தோர்வட்டம் - 688 012, ஆலப்புழா,
சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டாதினம் நடத்தப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசி அன்று தன்வந்திரி பகவான் அவதாரம் செய்ததாக மகாபாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நாள் தன்வந்திரி நாளாக கொண்டாடப்படுகிறது. தேவலோக மருத்துவரான தன்வந்திரிக்கு ஓணத் திருவிழா அன்று இங்கு நடக்கும் பால்பாயாச வழிபாடு சிறப்பு மிக்கது.
தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
தந்வந்த்ரயே அம்ருத
கலசஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம. 

தன்வந்திரி கடவுள்  அனைத்து நோய்களையும் தன் வல்லமையால் காட்டுத்தீபோல அழிக்கிறார்
"Namaami dhanvantari maadi dēvam suraa surair vandita paada padmam
loke jara ruk bhaya mrutyu naasham daatarameesham vividoushadeenaam

shankham chakram jalaukam
dadhad amruta ghatam charu dorbhi chaturbhih
Sukshma svacch ati hridyam
sukha pari vilasanam
maulim ambhoja netram
Kalam bhodojo valangam kati tata vilasan
charu pitam baradhyam
Vande dhanvantarim tam nikhila gada vanam
praudha davagni leelam"


Lord Dhanvantari is the source of Ayurveda medicine

By reciting Lord Dhanvantari Mantras we can get relieved from most of the severe health ailments and lead a happy and peaceful life. A healthy life is the true wealth . If our health ailments are our impediments to achieve our success we have to pray to Lord Dhanvantari by chanting his mantra and performing his homa. In the Dhanvantari homa lot of rare herbs are used as samth and put in the holy fire. The herbal smoke which arises in the Lord Dhanvantari homa mixed with the mantra vibrations is surely having a great medicinal effect on our body and soul.
The Holy mantra of Lord Dhanvantari can be recited in a cup of milk or honey or water or Medicines or in any form of pure eatable items and taken as Lord Dhanvantari's Prasada which will have a tremendous effect on the patients and ensures the cure of body and mind ailments.
The veda proclaims that It is true and true By reciting the holy names of Lord Dhanvantari " Achutha Anantha Govinda" we can get relieved from all kinds of doshas which hampers our body or mind.
Normally the ailments of mind or body are occurring due to three doshas (bad effects) which are
The acts done by us on our own.
The acts done by others This will include human beings, animals, Bootha, Pitchacha and other creatures, And finally, 
The acts which are not totally in our control like natural calamities etc.,
All these three doshas are called thapatriyam which are getting cured by reciting the holy namas of Lord Dhanvantari "Achutha Anantha Govinda"
Let Lord Dhanvantari showers a hale and hearty life on us.

Sarve janas sukino bhavanthu