Tuesday, October 23, 2012

மலச்சிக்கலுக்கு கொன்றை CASSIA FISTULA

மலச்சிக்கலுக்கு கொன்றை  CASSIA FISTULA
பொதுவான குணம் கொன்றை தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப் படும் சிறு மர வகையைச் சேர்ந்தது. பல கிளைகள் விடும், ஒவ்வொரு கிளையிலும் பல சிறு கிளைகள் தோன்றி அதில் கொத்துக் கொத்தாக இலைக் கொத்துக்கள் தோன்றும், இதன் இலை நெல்லி இலை போல இருக்கும். ஒரே காம்பில் பல இலைகள் ஒன்றுக்கொன்று எதிர் வரிசையாகத் தோன்றும் ஒவ்வொரு இணுக்கு சேருமிடத்திலும் ஒரு சிறு கிளை தோன்றி, அதில் பல நரம்புகள் தோன்றி அந்த நரம்புகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் விட்டு சிகப்பு நிறப் பூக்கள் மலரும். இந்த பூ ஆவரம்பூவின் வடிவத்திலிருக்கும்.இடையிடையே இலேசான மஞ்சள் நிறமும் கலந்திருக்கும். பூவின் நடுவில் 5-6 மகரந்த நரம்புகள் வெளியே நீண்டிருக்கும். நீண்ட உரிளைவடிவக் காய்களையும், உடைய இலையுதிர் மரம். இது விதை மூலம் இனப் பெருக்கம் ஆகின்றது.

வேறுபெயர்கள்  பெருங்கொன்றை,சிறுகொன்றை
ஆங்கிலப் பெயர் CASSIA FISTULA  தாவரக்குடும்பம் : CAESALPINIACEAE
மருத்துவக் குணங்கள்
மரம், நோய்நீக்கி உடல் தேற்றும். காய்ச்சல் தணிக்கும் மலமிளக்கும் வாந்தியுண்டாக்கும் உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்று வாய்வகற்றும் நுண்புழுக் கொல்லும் மலமிளக்கும். காயிலுள்ள சதை (சரக்கொன்றைப் புளி) மலமிளக்கும்.
வேர்ப் பட்டை 20 கிராம் பஞ்சு போல் நசுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு கால் விட்டராகக் காய்ச்சி 5 கிராம் திரிகடுகு சூரணம் சேர்த்து காலையில் பாதியும் மாலையில் பாதியும் சாப்பிட காய்ச்சல் தணியும் இதய நோய் குணமாகும். நீண்ட நாள் சாப்பிட மேக நோய் புண்கள், கணுச்சூலை தீரும். ஒரு முறை மலம் கழியுமாறு அளவை திட்டப் படுத்திக் கொள்ள வேண்டும்.
10 கிரைம் சரக்கொன்றைப் பூவை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. ஆகக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிட வயிற்ற்றுப் புழிக்கள் கழிந்து நோயகலும். நீடித்துச் சாபிட மது மேகம் தீரும்.
பூவை வதக்கித்துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் அகலும்.
காயின் மேலுள்ள ஓட்டைப் பொடித்துக் குங்கமப்பூ சர்க்கரை சமன் கலந்து பன்னீரில் அரைத்து பெரிய பட்டாணி அளவாய் மாத்திரை செய்து உலர்த்திக் கொண்டு மகப் பேற்றின் போது வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில் 10 நிமிடத்திற்கு 1 மாத்திரை கொடுக்க இறந்த குழந்தையை வெளித்தள்ளும்.
சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சமன் கலந்து உணவுப் பாகங்களில் பயன்படுத்த மலர்ச்சிக்கல் அறும்.
கொன்றைப் புளியை நீரில் அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட கணுச் சூலை, வீக்கம் ஆகியவை தீரும்.
சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் சமனளவு அரைத்துக் கொட்டைப் பாக்களவு பாலில் கலக்கி உண்டு வந்தால் வெட்டை, காமாலை, பாண்டு ஆகியவை தீரும்.
கொழுந்தை அவித்துப் பிழிந்த சாற்றில் சர்க்கரை கலந்து 200 மி.லி. கொடுக்க வயிற்றிலுள்ள நுண்புழுக்கள், திமிர் பூச்சிகள் அகலும்.
பூவை எலுமிச்சைச்சாறு விட்டரைத்து உடலில் பூசி வைத்திருந்து குளிக்கச் சொறி, கரப்பான், தேமல் ஆகியவை தீரும்.
கொன்றை மரத்தின் வேர்ப்பட்டையைக் கொண்டு வந்து கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, ஒரு கை பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகாக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலையாகக் கொடுத்து வந்தால் வாய்வு சம்பந்த மான வலிகள், வாத சம்பந்தமான வலிகள் உடலில் தோன்றும் அரிப்பு, சிறு சிரங்குகள், மேக கிரணம் இவைகள் படிப்படியாக மறைந்து விடும்.
கொன்றை மரத்தின் பட்டையை நறுக்கி, அதில் ஒரு கைப் பிடியளவும், தூது வேளைக் கொடியின் இலை,பூ, காய்,வேர் இவைகளில் வகைக்கு 5 கிராம் வீதமும் எடுத்து அதையும் பொடியாக நறுக்கி, வெய்யிலில் காயவைத்து இடித்து சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு. மொச்சைக் கொட்டையளவு தூளை எடுத்து, ஒரு டம்ளர் காச்சிய பசும் பாலில் போட்டுக் கலந்து, காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் சுவாசகாசம் படிப்படியாக் குறைந்து அறவே நீங்கி விடும். 
கொன்றைப் பூக்களில் கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு 100 கிராம் நல்லெண்ணையை விட்டு நன்றாகக் காயவைத்து பூக்கள் சிவந்து வரும் சமயம் இறக்கி, எண்ணணெய் ஆறியபின் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு காது சம்பந்தமான ஏற்படும் கோளாறுகளுக்கு, காலை மாலை ஒரு காதுக்கு இரண்டு துளி வீதம் விட்டு பஞ்சடைத்து வந்தால் , காது சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.இலைகளை கண் இமைகளின் மேல் இரவு படுக்குமுன் வைத்துக் கட்டி காலையில் அவிழ்த்துவிட வேண்டும் இந்த விதமாக ஐந்து நாட்கள் கட்டி வந்தால் கண் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.

சிறுநீர் பெருக்கும் முள்ளங்கி RAPHANUS

சிறுநீர் பெருக்கும் முள்ளங்கி  RAPHANUS

பொதுவான குணம்
முள்ளங்கி சமைத்துண்ணக்கூடிய கிழங்கினம். மணற்பாங்கான இடத்திலும், வளமான மண்ணில் நன்கு வளரும். குளிர் காலத்தில் மலைப்பிரதேசங்களில் அதிக மகசூல் கொடுக்கும். இதன் கிழங்குகள் முட்டை வடிவத்திலும், சிலிண்டர் வடிவத்திலும், உருண்டை வடிவத்திலும் இருக்கும். கிழங்குகள் இளசாக இருக்கும் போதே பிடுங்கி உபயோகிக்க வேண்டும். முற்றினால் வெண்டாகிவிடும் சமையலுக்குப் பயன்படுத்த முடியாது. இளசாக இருக்கும் போது செடியைப் பிடுங்கி கிழங்கைக் கழுவி விட்டுப் பச்சாயாகவே உப்பு காரம் போட்டுச் சாப்பிடுவார்கள், கடித்துத் தின்ன நன்றாக இருக்கும். இங்கு வெள்ளை முள்ளங்கிப் பயன்கள் கூறப்படுகின்றன. இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றது. மேட்டுப்பாத்தி அமைத்து மண்ணைப் பக்குவப்படுத்தி விதைகளைத்தூவி பின் 2 அஙுகுல மணல்போட்டு பூவாழியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஈரம் அதிகம் காயாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சில நாட்களில் நாற்றுகள் வளர்ந்த பின் எடுத்துப் பார்களில் நடவேண்டும். அல்லது பார்களின் உச்சியிலும் விதை ஊன்றி முளைக்க வைக்கலாம். சுமார் 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் முள்ளங்கி பிடுங்கும் தருணம் வந்து விடும். தமிழகமெங்கும் இது பயிரிடப்படுகிறது. விதை எடுக்க மட்டும் முற்ற விடுவார்கள்.
வேறுபெயர்கள்  மூலகம், மற்றும் உள்ளங்கி.
ஆங்கிலப் பெயர் RAPHANUS   தாவரக் குடும்பப் பெயர் : BRASSICACEAE
மருத்துவக் குணங்கள்
முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும், விதை காமம் பெருக்கும்.
சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.
முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.
இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.
வாதங்கரப்பான் வயிற்றெரிவு சூலை குடல்
வாதங்காசம் ஐயம் வன்தலைநோய்-மோதுநீர்க்
கோவை பன்னோய் பல் கிரந்தி குன்மம் இரைப்புக்கடுப்பு
சாவும் முள்ளங்கிக் கந்தத்தால்.
என இதன் மருத்துவ குணத்தைக் கூறுகிறார் கும்பமுனி. இந்த முள்ளங்கியால் வாத நோய், நீர்வடியும் படையான கரப்பான், வயிற்றெரிச்சல், நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும் என்பது பாடல் கருத்தாகும். சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் செர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.
இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும்.
கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.
இதன் விதையைக் குடிநீராக - காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி உண்டாகும்.

மூலச்சூடு போக மூக்கிரட்டை BOERHAAVIA DIFFUSA

மூலச்சூடு போக மூக்கிரட்டை  BOERHAAVIA DIFFUSA

பொதுவான குணம் மூக்கிரட்டை தரையோடு படர்ந்து வளரும் சிறு கொடி. இலைகள் மேல்புரம் பச்சையாகவும் கீழ்புரம் வெளுத்து சாம்பல் நிறத்திலும் நீள்வட்டமாக எதிர் அடுக்கில் இருக்கும். செந்நிறச் சிறு பூக்களையும் சிறு கிழங்கு போன்ற வேர்களையும் உடைய கொடி. இது தமிழகமெங்கும் தோட்டங்களிலும், தரிசு நிலங்களிலும் தானே வளர்கிறது. சாலையோரங்களிலும், வாய்க்கால் போன்ற இடங்களிலும் காணப்படும் கழைக்கொடி. சிறிது வேர் இருந்தாலே ஈரம் பட்டவுடன் தழைத்துவிடும். இதன் தாயகம் இந்தியா பின் பசிபிக்கிலும், தென் அமரிக்காவிலும் பரவிற்று. இது செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூத்துக்காய்க்கும். விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.
வேறுபெயர்கள் மூக்குறட்டை, சாட்டரணை, மூச்சரைச்சாரணை
ஆங்கிலப் பெயர் BOERHAAVIA DIFFUSA தாவரக்குடும்பம் ; NYCTAGINACEAE
மருத்துவக் குணங்கள்
ஒரு பிடி  வேரும், 4 மிழகும் 100 மி.லி.விளக் கெண்ணையில் வாசனை வரக் காய்ச்சி ஆறவிட்டடு வடிகட்டி வைத்ததுக் கொண்டு  6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி. அதற்கு மேல் 30 மி.லி. வாரம் 1 அல்லது 2 முறை கொடுத்துவர மலச்சிக்கல், மூலச்சூடு, நமைச்சல், சொறி சிரங்கு, மலக்கழிச்சல், வாந்தி,செரியாமை ஆகியவைத் தீரும். மாலையில் வசம்பு சுட்ட கரியைப் பொடி செய்து தேனில் உட்கொள்ளவும்.
ஒரு பிடி வேர், மிளகு 4, உந்தாமணிச்சாறு 50 மி.ல்லி. ஆகியவற்றை 100 மி.லி. விளக்கெண்ணையில் காய்ச்சி வாரம் 2 முறை மேற்கண்ட முறையில் சொன்னவாறு கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் காமாலை, கப இருமல், சளி, மாந்த இழுப்பு, அடிக்கடி சளி, காய்ச்சல்  வருதல் குணமாகும்.
ஒரு பிடி மூக்கிரட்டை வேர், அருகம்புல் 1 பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்து வர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணரல் தீரும்.
வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி, மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீர் ஏற்றம், சோகை, வீக்கம், நீர்கட்டு, மகோந்தரம் தீரும்.
இலையைப் பொறியல், துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வேரை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை ஒரு சிட்டிகை தேனில் கொள்ள மாலைக் கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.
கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்
இலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரப் பொலிவும் இளமையும் வசீகரமும் உண்டாகும்.
இதன் இலைகளை சுத்தம் செய்து நன்கு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து கால் ஆழாக்கு  கருங்குறவை அரிசியில் சேர்த்து சமைத்து அந்த மாவை அடையாகத் தட்டி வாணலியில் அதிக எண்ணெய்யிட்டு அதை வேகவைத்து வேளைக்கு ஒரு அடை வீதம் காலை, மாலை 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். அப்போது தவிர்க்க வேண்டியவை காரம், மீன், கருவாடு, ஆகியவை.
மூக்கிரட்டைப் பட்டை வேர்-20 கிராம், மாவிலங்கு மரப்பட்டை-20 கிராம், வெள்ளைச் சாரணை வேர்-20 கிராம் மூன்றையும் பொடியாக இடித்து முதல் நாள் இரவில் 250 மி.லி. தண்ணீரில் ஊரவைக்கவேண்டும். 50 மி.லி. வரும் வரை கொதிக்கவைத்து இறக்கி வைத்து ஆறவிட்டு வடிகட்ட வேண்டும். இத்துடன் 60 மி.லி. கிராம் நண்டுக்கல் பற்பம் சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும் இதை அருந்திவர 2,3 மாதங்களில்  முகவாத நோய் நிரந்தர குணம் ஏற்படும்.

வெட்டுக்காயங்கள் குணமாக முறிகூடி HEMIGRAPHIS COLORATA

வெட்டுக்காயங்கள் குணமாக முறிகூடி HEMIGRAPHIS COLORATA
பொதுவான குணம் முறிகூடி ஒரு சிறிய மூலிகைச் செடி. இது சுமார் 12-30 செ.மீ. வரை வளரக்கூடிய செடி. இதன் தாயகம் இந்தோநேசியாவில் ஜாவாவில் தோன்றியது. பின் வட கிழக்கு ஆசியாவில் பரவிற்று. இது செழிப்பான காடுகளில் வளர்வது.  இதன்  இலைகள் சுமார் 6 – 10 செ.மீ. நீளமாகவும், இருதய வடிவத்திலும், இலை ஓரங்கள் வெட்டுப் பல் போன்று, எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மேலே கத்தரிப்பூ கலராகவும் அடிபாகம் சிகப்புக் கலந்த கரு நீலமாகவும் இருக்கும். பூ சிறிதாக  வெண்மை நிறமாக இருக்கும். சுமார் 3 செ.மீ. அளவில் இருக்கும். சிறிய பழம் விட்டு அதில் சிறு சிறு விதைகள் அதிகமாக இருக்கும். ஆனால் இன விருத்தி இதன் தண்டு கட்டிங் மூலம் தான் அதிகமாகச் செய்வர்கள்.
வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர் HEMIGRAPHIS COLORATA.  தாவரக்குடும்பம் :-  ACANTHACEAE
மருத்துவக் குணங்கள்
முறிகூடி என்றால் புதிதாக ஏற்படும் வெட்டுக் காயங்கள் இந்த மூலிகையால் உடனே குணமடைவதால் காரணப்பெயராக அமைந்துள்ளது. இதன் இலைகள் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. இந்தச் செடியின் கத்தரிப்பூ நிறத்தில் பழபழப்பாக இருப்பதால் அழகுச் செடியாக தொட்டிகளிலும், தோட்டத்தில் பார்டர் போன்றும் வளர்ப்பார்கள். தொங்கும் தொட்டிகழிலும் வளர்க்கப்படுகிறது. இதன் சூப் உடல் எடையைக் குறைக்கிறது. இது இரத்த சோகையையும் உணவுக் குழலில் ஏற்படும் புண்களையும் ஆற்ற வல்லது.
முறிகூடியன் இலையை அரைத்து புதிதாக ஏற்படும் வெட்டுக் காயங்களுக்கு வைத்துக் கட்டினால் குணமடையும்.
இதன் இலைகள் கெட்டியாக இருப்பதால் தண்ணீருக்கு அடியில் வைத்திருந்தால் 3 மாதம் கூட வாடாமல் இருக்கும். இதனால் இதை மீன் வளர்க்கும் தொட்டிகளில் சில காலம் வைப்பார்கள். மீன்கள் இதை உணவாக அருந்தாது.
மகாராஸ்டிராவில் ஜோன் டி ஈபன் என்ற டாக்டர் இதன் இலையிலிருந்து சூப் தயார் செய்து அறிந்தினால் உடல் எடை குறைவதாகக் கண்டறிந்துள்ளார். இது இயற்கை வைத்தியம் என்பதால் பக்க விழைவுகள் இல்லை என்றும்  இதன் சூப் ஒரு வாரத்தில் 2 கிலோ எடையைக் குறைக்கும் என்கிறார்.
இந்த இலையை கேரளத்தில் அதிகம் பயன் படுத்துகிறார்கள். மேலும் இந்த முறிகூட்டியின் பயன் தெறிந்தவர்கள் தெறியப்படுத்தினால் இதில் சேர்த்துக்கொள்ளப்படும். மக்கள் பயன் அடையட்டும்.

இதயத்தை வலுவூட்ட ரோஜா ROSA DAMESCENA

இதயத்தை வலுவூட்ட ரோஜா ROSA DAMESCENA
பொதுவான குணம் இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. ரோஜா வியாபாரமாக பல்கேரியா, இட்டலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகமாகப் பயிரிடுகிறார்கள்  ரோஜா 5000 வருடங்களுக்கு முன்பே இந்தாயிவில் இருந்துள்ளது. அதன் பின் தான் மற்ற நாடுகளுக்குப் பரவிற்று.  ரோஸ் வொயின் பெரிசியா நாட்டில் பிரபலமானது. அதை அரசர்களும், இராணிகளும், பெரும் பிரமுகர்களும் தான் பயன் படுத்துவார்கள். வீடுகளிலும் தோட்டங்களிலும் அளகுக்காக வளர்கின்றனர். காடுகளில் தன்னிச்சையக வளரும். இது சிறு செடி வகையைச் சேர்ந்தது.  கூர்நுனிப் பற்களுள்ள கூட்டிலைகள்யுடையது. இதில் முட்கள் காணப்படும். நல்ல ஈரமும் உரமும் இருந்தால் நன்கு வளரும். இலைகளின் விளிம்புகள் அரும்புகள் இருக்கும். இளஞ்சிவப்பு நிறமுடைய ரோஜா நறுமணத்துடன் இருக்கும். காட்டு ரோஜா மணமிருக்காது. ரோஜா கட்டிங்மூலமும், பதியம் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.
வேறுபெயர்கள் சிறுதாமரை, குலாப்பூ, பன்னீர்பூ, ரோஜாப்பூ
ஆங்கிலப் பெயர் ROSA DAMESCENA. தாவரக்குடும்பம் :- ROSACEAE
மருத்துவக் குணங்கள்
ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்.  பெண்களுக்கு
கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.
ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து  ஒருகைப்பிடயளவு  இதழை ஒரு சட்டியில் போட்டு  ஒரு டம்ளர்  தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து  இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.
ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடயளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்க பூரண
மாகக் குணமாகும்.
பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கொளாறினால்  பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறுத்து, காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயம் பித்த்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களைச்
சேர்க்க க்கூடாது.
ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும். போட்டது முதல், காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதல் சாப்பிட வேண்டும். காலையில் வெய்யிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மருந்துக் கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வர வேண்டும்.
ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை சட்டியில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, காட்டுச் சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.
பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும்.
ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன்  நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். இது மணத்திற்கும், களிம்பு, சந்தனம் முதலியவற்றில் சேர்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பன்னீர் 238 கிராம், மீன் கொழுப்பு 51 கிராம், வாதுமை எண்ணெய் 306 கிராம் ரோஜாப்பூ எண்ணெய் 10 துளி இவைகளை நன்கு கலந்து உடம்பில் உள்ள புண்களுக்கு போட்டு வர துர்நாற்றம் விலகும்.
ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
ரோஜாப்பூக்ளிலிருந்து நறுமணமான எண்ணெய் எடுக்கிறார்கள். அதற்கு அத்தர் என்று பெயர்.
சித்தமருத்துவத்தில் இதனை பொதுவாக கழிச்சலுக்கு கொடுக்கும் மருந்துகளிலும் லேகியங்கள், மணப்பாகு முதலியவற்றுக்கு நறுமணம் ஊட்டுவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.
ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.
ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை  ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும் பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும். குன்ம வயிற்று வலிக்கு இது சிறந்ததாகும்.
ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

உடலுக்குப் புத்துணச்சிக்கு ரோஸ்மேரி ROSEMARINUS OFFICINALIS

உடலுக்குப் புத்துணச்சிக்கு ரோஸ்மேரி ROSEMARINUS OFFICINALIS
பொதுவான குணம் இது ஒரு குருஞ்செடி. இது ஸ்பெயின் போர்சுக்கலிலிருந்து இந்தியாவுக்கு வந்தது. நீள் பாத்தி அமைத்து இரண்டடிக்கு இரண்டடி இடைவெளி விட்டு நாற்றுக்களை நடுவார்கள். ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாச்ச வேண்டும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் வேப்பிலை போன்று கூர்மையாக ஊசிபோன்றும் இருக்கும். நட்ட எட்டாவது மாதம் முதல் இலை தண்டு அறுவடை செய்யலாம். இலையை ஐந்து நாட்கள் நிழலில் உலரவைத்து பின் எண்ணெய் எடுப்பார்கள், இலை இரண்டு மாத த்திற்கு ஒரு முறை அறுவடை செய்வார்கள். அப்போது 30 -50 செ.மீ.நீளமுள்ள குச்சியுடன் பூவையும் சேர்த்து அறுவடைசெய்யவேண்டும். வெட்டுக்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். 8 - 10 செ.மீ நீளமுள்ள குச்சுகள் இதற்கு ஏற்றவை. வெட்டுக் குச்சிகள் 40 நாட்களில்வேர் பிடிக்கும்.இதன் இலைகள் வாசனையாக இருக்கும். ரோஸ்மேரி மலைப்பகுதிகளில் நன்றாக வளரும். சம வெளியில் வளர்வது எண்ணெய் எடுக்கும் சதவிகிதம் மிகக்குறைவாகஇருக்கும்.
வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர் ROSEMARINUS OFFICINALIS தாவரக்குடும்பம் - LABIATAE.
மருத்துவக் குணங்கள்
ரோஸ்மேரி இலை தண்டு,பூ,இவைகளில்லருந்து எடுக்கப்படும் வாசனை எண்ணெய் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. இலைகளில் உள்ள வாசனைப் பொருள் அழகு சாதனப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது. மேலும் உணவு, உணவுப் பொருள்களைப் பதப்படுத்தவும் பயன்படுகிறது. இது சிறுநீர் சம்பந்தமான் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். கண்களுக்கு குளிர்ச்சியூட்ட, சுத்தப்படுத்திய நீருடன் கலந்தும் உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் இலைகளை பச்சையாகவும், காயவைத்தும் தேநீருடன் கொதிக்க வைத்து நன்கு கலந்து பருகினால் சுவையாகவும், உடலுக்குப் புத்துணச்சியையும் ஊட்டுகின்றது. இது இரத்த ஓட்டப் பாதைகளை சீராக வைக்கக் பயன்படுகிறது. உடலின் மேல் பாகத்தில் தேனீக்கள் கொட்டியதைக் குணப்படுதுகிறது. வாய் நாற்றத்தையும் போக்கும், பாலுண்ர்வைத் தூண்டுகின்றது. நரம்பு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துகின்றது. வயிற்று வலி, தலை வலிகளைக் குணப்படுத்துகின்றது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளைக் குணமாக்குகிறது. ரோஸ்மேரி இலையின்பொடியை மாமிசம், மீன் போன்ற உணவுப் பொருளோடு சேர்க்கும் போது விஷத்தன்மையைப் போக்குகின்றது.தொண்டைப் புண், பல் ஈறு வலி, நாட்பட்ட ஆறாதபுண் இவைகளைக் குணப்படுத்துகின்றது. இதன் எண்ணெய் ஞாபக சத்தியை அதிகறிக்கின்றது. உடல் அறிப்பையும், தசைநார்களில் ஏற்படும் வலிகளைக் குணப்படுத்துகின்றது.
(ROSEMARY (Rosmarinus officinalis) is a stimulant of the circulatory system. It is used to treat bites and stings externally. Internally, it is used to treat migraines, bad breath, and to stimulate the sexual organs. It is also used to treat nervous disorders, upset stomachs, and is used to regulate the menstrual cycle and ease cramps. Mixing the crushed leaves generously into meats, fish and potato salads prevents food poisoning while using itin antiseptic gargles relieves sore throat, gum problems and canker sores.The essential oil is used in aromatherapy as an inhalant and decongestant, and to enhance memory. Rosemary is also used in lotions to ease arthritisand muscle pain. )

புண் ஆற்ற லாவண்டர் LAVENDULA OFFICINALIS

புண் ஆற்ற லாவண்டர் LAVENDULA OFFICINALIS

பொதுவான குணம் அனைத்து வகை வழமான மண்களிலும் வளரும். ஆனால் 3000 அடி உயரத்திற்கு மேல் நன்கு வளமாக 3 அடி உயரம் வரை வளரும். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். நேராக வளரும். பூக்கள் நீல நிறமாக இருக்கும். இலைகளும், பூக்களும் வாசனையாக இருக்கும். பிரான்ஸ், மெடிட்டரேனியன் மேற்கிலிருந்து இங்கிலாந்திற்குப் பரவியது. அதை வாசனைக்காகவும், குளிக்கவும் பயன்படுத்தினர். பழைய கிரேக்கர்களால் சிரியாவில் இதை NARD என்று அழைத்தனர். இதை கிரீக் NARDUS என்றும் ரோமன் ASARUM என்றும் அழைத்தனர். அமரிக்கா, ஐரோப்பா, பிரான்ஸ், பல்கேரியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் ரஸ்யாவில் விழைவிக்கப்பட்டது. இதன் வயது 3,4 வருடம். விதையிலிருந்து நாற்றங்கால் அமைத்து சிறு செடியாக வேர் விட்ட பின் எடுத்து நடலாம். ஆனால் 10 செ.மீ. நீளமான தண்டுகளை நாற்றங்காலில் பசுமைக்குடிலில் நட்டு வேர் விட்டவுடன் எடுத்து 4 அடிக்கு 2 அடி என்ற இடைவெளி விட்டு நட்டுத் தண்ணீர் பாச்ச வேண்டும். இது தான் சிறந்த முறை. தேவையான பொழுது களை எடுக்க வேண்டும். தேவைக்கேற்ற நீர் பாச்ச வேண்டும். அறுவடை மற்றும் விளைச்சல் வருடத்திற்கு 200 கிலோ இலைகள் மற்றும் பூக்கள் பற்றும் 50 கிலோ எண்ணையும் கிடைக்கும். பூச்சி நோய் தாக்குதலுக்குத் தேவைக்கேற்ப மருந்தடித்துக் கட்டுப்படுத்த வேண்டும். பூக்கள் மற்றும் இலைகளை பறித்தவுடனே அனுப்ப வேண்டும்.
வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர் LAVENDULA OFFICINALIS தாவரக்குடும்பம்: LABIATAE.
மருத்துவக் குணங்கள்
லாவண்டர் நரம்பு சம்பந்தமான மற்றும் செரிமான சம்பந்தமான நோய்கள் தீரும். அழகு சாதன பொருள் மற்றும் வாசனைத் திரவியம் தயாரிக்கப் பயன்படுகிறது. இரண்டாவது உலகப்போரின் போது காயம் பட்ட இராணுவ வீரர்களுக்கு புண் ஆற்ற லாவண்டர் எண்ணெயைப் பயன் படுத்தினார்கள். இங்கிலாந்தில் குழிக்கும் நீரில் இதன் எண்ணெயைக் கலந்து வாசனைக்காகப் பயன் படுத்தினர். டாய்லெட்டுகளைக் கழுவ, வீடு கழுவ, புண்களைக்கழுவ, தீக்காயம் கழுவப் பயன்படுத்தினர்.
லாவண்டர் எண்ணெய் பயன் படுத்தினால் டென்சன் குறையும், தலைவலி குண்மாகும். ஆஸ்த்துமா சரியாகும், குளிர், இருமல் குறையும், தொண்டைவலி குணமாகும். ஜீரணமாகப் பயன்படும், விழையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் போது அல்லது போட்டியின் போது தொடையில் ஏற்படும் பிடிப்பை குணப்படுத்தும். தோல் வியாதிகள் அனைத்தும் குணமாகும். பூச்சிக் கடியால் ஏற்படும் அறிப்பு இதைத் தடவ குணமாகும். பல்வலி, சுழுக்கு, வீக்கம் ஆகியவை இதனால் குணமடையும். ரோமானியர்கள் இந்த எண்ணெயை நல்ல விலை கொடுத்து வாங்கினர். வெளிநாட்டில் லாவண்டர் பூவினை டீ தயாரிப்பில் பயன் படுத்துகிறார்கள்.