Thursday, November 8, 2012

வெள்ளைப் படுதல் குணமாக பொடுதலை - Phyla nodiflora Greene

வெள்ளைப் படுதல் குணமாக பொடுதலை - Phyla nodiflora Greene

பொதுவான குணம் 

பொடுதலை  பல கிளைகளோடு, கணுக்களில் வேர்விட்டு தரையில் படரும் ஒரு மூலிகை. இந்த மருத்துவ செடியின் இலை 2 3.2 சென்டிமீட்டர் நீளமும் 1 2 சென்டிமீட்டர் அகலம் கொண்டது, நுனி வட்டமானது, ஓரங்கள் தீவிரமாக வெள்ளை முடிகள் கொண்டது போல இருக்கும். (சில இலைகளின் ஓரங்களில் இருப்பது போல்) கூரிய பற்கள் கொண்டதாக இருக்கும்.

வேறுபெயர்கள் 
ஆங்கிலப் பெயர் Phyla nodiflora Greene. Rich and Verbena nodiflora L.
மருத்துவக் குணங்கள்
இத்தாவரம் வயல் வரப்புகளிலும், காடுகளிலும் தரையில் படரும் சிறிய கொடியினம். இதன் காய்கள் திப்பிலி போல் இருக்கும்.
நூறு கிராம் பொடுதலை இலையை 50 மில்லி நீரிலிட்டு சிறு தீயில் எரித்து கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகு, சூரணம் சேர்த்து குடித்துவர சிறுநீரக நீர்த்தாரைப்புண் அதனால் ஏற்படும் வெள்ளைப் படுதல் குணமாகும்.
பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும், எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.
பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும்.
பொடுதலையை வதக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து இறுத்துக் கொடுக்க இருமல், வலிநோய்கள் ஆகியன தீரும். இலைகளை வதக்கி வறுத்த ஓமத்துடன் சேர்த்தரைத்து நீர்விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு சங்களவு புகட்ட குழந்தைகளின் கழிச்சல் நீங்கும்.
இலையுடன் சீரகம் அரைத்து கொடுக்க வெள்ளை படுதல் நிற்கும். இலையைத் துவையல் செய்து உண்டுவந்தால் உள்மூலம் தணியும். இலையை அரைத்து கட்டி, கொப்புளத்தில் பற்றிட கட்டிகள் பழுத்து உடையும்.

No comments:

Post a Comment