Thursday, November 8, 2012

புத்துணர்வு - பசி உணர்வு தரும் புதினா - Mint

புத்துணர்வு - பசி உணர்வு தரும் புதினா - Mint
பொதுவான குணம் புத்துணர்வும் பசி உணர்வும் புதினாச்சாறு தரும். சூட்டுத்தன்மை தரும். எல்லாரும் தினமும் கொத்தமல்லி, கறிவேப்பிலை போல் இதையும் பயன்படுத்துகின்றனர். சமைக்காமல் சாறாகப் பயன்படுத்துகையில் நல்ல பலன்கள் பெறுகின்றனர்.
வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர்  Mint
மருத்துவக் குணங்கள்
வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும்.
உடல் தொப்பை, பருமன் குறைகிறது. அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது. 
சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறுகின்றனர்.
தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறுகின்றது.
மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.

1 comment: