Sunday, December 27, 2015

மரம் ஒரு அட்சய பாத்திரம்



மரம் ஒரு அட்சய பாத்திரம்

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனைசுவாசிக்கிறான்.,
ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,
மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,
ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........,
மரம் வளர்ப்பின் அவசியமும் நன்மைகளும்:
1. உயிர் வாழ்க்கைக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற நீரும், மூச்சுக்காற்றும் மரங்கள் வழியாக  தான்  நாம் பெற வேண்டி உள்ளது.
2. மரம் வளர்ப்பின் மூலம் நாம் நேரடியான பலங்களைவிட மறைமுகமான பலன்கள் அதிகமாக உள்ளது.
3. 50 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம் ரூ.5.30 இலட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகின்றது.
ரூ.6.40 இலட்சம் மதிப்புள்ள அரிப்பை தடுக்கின்றது, ரூ.10.00 இலட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது, ரூ.10.30 இலட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது,
ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 1000 கீலோ.
அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,
மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்........,
வெப்பமடைந்து வரும் புவியின் சூட்டைத் தணிக்க தனி மனிதர்களால் செய்யக்கூடிய ஒரு காரியம் மரம் வளர்ப்புதான். ஒரு மரம் வளர்த்தால் ஒரு வளாகத்தில் இரண்டு டிகிரி வெப்பத்தைக் குறைக்க முடியும்.
மரம் வளர்ப்பதால் மாசு குறைகிறது. மழை வருகிறது. மண் கரையாமல் பிடிப்பை உறுதி செய்ய உதவுகிறது. ஊர்வன, நடப்பன உள்ளிட்ட உயிரினங்கள் ஏற்படுத்தும் மாசைக் கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு மட்டுமே உண்டு. மனிதன் வெளியேற்றும் கார்பன் வாயுவை உள்வாங்கி பிராண வாயுவை வெளிவிடுகிறது. மரத்தின் மூலம் நிழல் கிடைக்கிறது. சூடான காற்று தென்றலாகிறது. பறவைகளின் சரணாலயமாகவும் மரம் இருக்கிறது. இப்படி மரம் ஓர் உயிர்ப் பாலமாக அமைகிறது
----
மரங்கள் வளர்ப்பதுதான்….
உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியே தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், "ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை" என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

கதிர் வீச்சைத் தடுக்கும்
செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது."

No comments:

Post a Comment