Sunday, December 27, 2015

நாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்




நாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்
அகத்தி வலி, கபம், சோகை, குன்மம்
அதிமதுரம்- பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி
அரளி - அரிப்பு, கண் நோய், கிருமி
அருகம்புல் - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்
ஆடாதோடை - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி
ஆவாரை - நீரிழிவு, ரத்த பித்தம்
இஞ்சி - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்
எலுமிச்சை - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்
ஓமம் - கண்நோய், கபம், விக்கல்
கடுக்காய் - இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு
கண்டங்கத்திரி - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி
கரிசலாங்கண்ணி - பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி
கருவேப்பிலை - இரத்த பித்தம்
கருவேலம் - பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்
கீழாநெல்லி - காமாலை, பித்தம், இருமல்
குங்குலியம் பாண்டு நோய், காதுவலி
கொடிவேலி - கிரஹணி, வீக்கம்
கொத்தமல்லி - காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு
சதகுப்பை - இருமல், யோனி நோய்கள்
சீரகம் - வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி
தும்பை - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.
திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை
தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்
நன்னாரி - ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்
நாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி
நாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்
நிலவாரை- கபம், பித்தம், நீரழிவு
பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்
பூண்டு - இதய நோய், இருமல்
பூவரசு - நஞ்சு, நீரழிவு, விரணம்
பெருங்காயம் - வயிற்றுவலி, உப்புசம்
பேரீச்சை - கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி
மணத்தக்காளி - இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்
மிளகு - வயிற்று உப்புசம், பல்வலி
முள்ளங்கி காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு தொண்டை நோய்கள்
வசம்பு - மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்
வல்லாரை சோகை, நீரழிவு, வீக்கம்
வாகை - வீக்கம், அக்கி, இருமல்
வால்மிளகு - வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு
வில்வம் - வாதம், கபம்
விளாமிச்சம் வேர் நாவறட்சி, எரிச்சல்
வெற்றிலை - கபம், வாய்நாற்றம், சோர்வு
ஜாதிக்காய் - சுவையின்மை, இருமல்

Thursday, March 26, 2015

மூலிகை பூ



இலுப்பைப் பூ
இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

ஆவாரம் பூ
ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

அகத்திப்பூ
அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

நெல்லிப்பூ
உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

மகிழம்பூ
மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.

தாழம்பூ
இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

செம்பருத்திப்பூ
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

ரோஜாப்பூ
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.


வேப்பம்பூ
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

முருங்கைப்பூ
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.

மல்லிகைப்பூ
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கருஞ்செம்பை பூ
இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலை வலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

குங்குமப்பூ
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

Tuesday, February 24, 2015

மூலிகை நீர்




மூலிகை நீர்

சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் (இலைச்சாறு) நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.



மூலிகை நீர் - இலைச்சாறு

சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்குஉணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.


ஆவாரம்பூ நீர்

"
ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ" என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண்,நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறுமில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய்,வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும்கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம்,வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம்,கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்

"
தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்" என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,
தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.
துளசி இலைச்சாறு காய்ச்சல், இருமல், ஜீரணக் கோளாறுகள், ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவைகளை நீக்கி இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது

தூதுவளை இலைச்சாறு
தூதுவளை இலைச்சாறு மார்புச் சளியை அகற்றும்.
நரம்புத் தளர்ச்சி மறையும், மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும், தோல் நோய்கள் மறையும்.

வல்லாரை நீர்
வல்லாரை இலைச்சாறு நினைவாற்றல் வளரும், நரம்புத் தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும், தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும். இதயம் வலுவாகும்.
யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். "காய சித்திக்கு புளியாரை கபால கோளாறுக்கு வல்லாரை" என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம்எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும்,பயன்படுத்தி பயன் பெறலாம்.

அருகம்புல் சாறு
அருகம்புல் சாறு அருகம்புல் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து இரண்டு வாழைப்பழகங்களுடன் ஒருவேளை உணவை முடித்துக்கொள்ளவேண்டும்.

எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு புதிதாக க்ளுகோஸ் வாட்டர் ஏற்றியது போல் உடலுக்குப் புது இரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சத்துக்களை அளிக்கிறது.இரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.
அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது.

ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது. அருகம்புல் பச்சையம் இரத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. ஆஸ்துமா, இரத்த அழுத்தம் ஆகியவைகளை குறைக்கிறது. தாய்பால் அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை குறையும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு
மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு உடல் தங்கம் நிறமைடயும், கண்கள் நல்ல பார்வை பெறும்.
மூளைக்குச் சுறுசுறுப்பைத் தந்து அறிவு தெளிவு ஏற்படும்.காமாலை தீரும், மலச்சிக்கல் நீங்கும்.

பொன்னாங்கண்ணி இலைச்சாறு
பொன்னாங்கண்ணி இலைச்சாறு உடலுக்கு வலு ஊட்டுவதோடு பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கும், கண்ணொளி அதிகரிக்கும் வாதநோய்கள் மறையும், உடல் சூடு குறையும்.

வில்வ இலைச்சாறு
வில்வ இலைச்சாறு காய்ச்சல் குறையும், நீரழிவு குறையும், வயிற்றுப்புண்கள் ஆறும், நல்ல பசி எடுக்கும், மந்த புத்தி மாறும், மஞ்சள் காமாலை நீங்கும், காலாரா குறையும்.
முசுமுசுக்கை இலைச்சாறு
முசுமுசுக்கை இலைச்சாறு தொடர்ந்த இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் குறையும்.

புதினா இலைச்சாறு
புதினா இலைச்சாறு வாய்ப்புண், வயிற்றில், குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள் குறையும், வெண்குஷ்டம் குறையும்.

நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய் சாறு தலைமுடி உதிர்வது குறையும், தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள் குறையும், நன்கு பசிக்கும், இதயநோய்கள் குறையும், நீரழிவு நோய் குறையும், உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.

வாழைத்தண்டுச் சாறு
வாழைத்தண்டுச் சாறு சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும், இரத்த அழுத்தம் குறையும், தொந்தி குறையும், அமிலத்தை குறைக்கும், உடல், கை, கால் வீக்கம் குறையும், பாம்புக்கடி, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும், இரத்தம் சுத்தமாகும்.

சாம்பல் பூசணிக்காய்
சாம்பல் பூசணிக்காய் சாறு பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், வயிற்றுப்புண்கள், அமிலத்தைக் குறைக்கும்.

கேரட் சாறு
கேரட் சாறு கண்பார்வை ஒளி பெறும், கண்நோய்கள், பல்நோய்கள் குறையும், அமிலத்தைக் குறைக்கும்.
அரச இலைச்சாறு மலச்சிக்கல், உடல் சூடு, கர்ப்பப்பை நோய்கள் குறையும், காம உணர்வுகளைத் தூண்டச் செய்யும்.

பூவரசு இலைச்சாறு
பூவரசு இலைச்சாறு காலரா, தொழுநோய், தோல் நோய்கள் குறையும்.

கொத்தமல்லிசாறு
கொத்தமல்லிசாறு பசியைத் தூண்டும், பித்தம் குறையும், வாத நோய் குறையும், காய்ச்சல் குறையும், மூலம், காய்ச்சல், சளி, இருமல், வாதம் குறையும்