Monday, September 22, 2014

பாகற்காயின் குணநலன்



பாகற்காயின் குணநலன்



மரக்கறி வகைகளில் ஒன்றான பாகற்காயை சிலர் தவிர்த்து வருகிறார்கள் . அதன் குண நலன்களை அறியாதவர்களே இவர்கள் . கசப்பானாலும் உடம்புக்கு மிகவும் நல்லது . பல வியாதிகளுக்கு நிவாரணியாக இருக்கிறது .

பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும் என ஒரு ஆய்வு கூறுகிறது. உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய்க்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பாகற்காயை தமது உணவில் சேர்த்து கொண்டால் இவ்வியாதியில் இருந்து விடுபடலாம் .
பாகற்காய் கைக்கிறது என்று தானே அதனை விலக்கி வைக்கிறார்கள் சிலர் . அவர்கள் என்ன செய்ய வேண்டும் எனில் தேங்காய் உடைத்ததும் வரும் இளநீரில் சிறிது நேரம் வெட்டிய பாகற்காய் துண்டுகளை ஊற விட வேண்டும் . அல்லது உப்பு போட்டு ஊற வைக்க வேண்டும் . அப்போது அதில் உள்ள கைப்பு போய்விடும் .

பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சிலர் பாகற்காயை கறியாகவோ , பொரித்தோ , சம்பல் போட்டோ சாப்பிடுவார்கள் .

நமது உணவு வகைகளில் உவர்ப்பு , கசப்பு , உறைப்பு , இனிப்பு என்பன சேர்ந்து இருக்க வேண்டும் . உடம்புக்கு நல்லது . அதற்க்காக இனிப்புகளை மட்டும் உண்டால்நீரிழுவு வியாதி தான் வரும் . எதுவும் அளவோடு இருக்கட்டும் . நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

பாகற்காய் நமது நாவிக்குத்தான் கசப்பேத் தவிர உடலுக்கு இனிப்பானது.பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும்.இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.

எனவே பாகற்காயின் குண நலன்களை அறிந்து அதன் பயனை பெற்று கொள்ளுங்கள் . உணவுடன் சேர்த்து கொள்ளுங்கள் .

No comments:

Post a Comment